2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மகளிர் சங்கங்களுக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 24 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


பிரதேசத்திலுள்ள அனைத்து மகளிர்; சங்கங்களுக்கும் 230 இலட்சம் ரூபா  நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்நிதியை  பயன்படுத்தி மகளிர் தங்களது சங்கங்கங்களை  வலுப்படுத்தி  படிப்படியாக நன்மையடையலாமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மேலும், இப்பிரதேச மக்களின் தேவைக்கேற்ப அவர்களின் தேவையை  அடிப்படையாகக்கொண்டு வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்படும். இதன் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வழியேற்படுமெனவும் அவர் கூறினார்.

வவுணதீவு பிரதேசத்தில் சிறுகைத்தொழில், விவசாயம் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒருதொகுதி தொழில் உபகரணங்கள் திங்கட்கிழமை (23) வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
விவசாயம், தச்சுவேலை, மேசன் தொழில் புரிவோருக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின்  ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்நிகழ்வில்  பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி. ரவீந்திரன், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஜி;.ருத்திரமலர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் வி.நிர்மலராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .