2025 மே 01, வியாழக்கிழமை

வீடமைப்பு அதிகாரசபைக்கான மக்களின் நிலுவைக் கடனை ஹிஸ்புல்லாஹ் செலுத்தினார்

Menaka Mookandi   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு மக்கள் செலுத்த வேண்டிய நிலுவைக்கடன் ஐந்து இலட்சத்து 70ஆயிரம் ரூபாவை பொருளாதார அபிவிருத்திப்  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செலுத்தினார்.

இந்நிகழ்வு திங்கட்கிழமை (23) ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் - ஹிஸ்புல்லாஹ் மீள் எழுச்சிக் கிராமத்தில் இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பழைய வீட்டுத் தொகுதியின் ஐம்பது வீட்டுத் திட்ட கிராம மக்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கந்தையா ஜெகநாதன் மற்றும் அமைச்சரின் உத்தியோகஸ்தர்கள், சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடன் தவணைக் கட்டண நிபந்தனை ஒப்பந்தத்தின் கீழ்  நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட இந்த வீடுகளுக்குரிய தவணைக் கட்டணம், 1990ஆம் ஆண்டு இந்தக் கிராமத்து மக்கள் பயங்கரவாத சூழ்நிலையின் காரணமாக இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியதிலிருந்து செலுத்தப்படாமல் நிலுவையாக இருந்து வந்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்படி ஹிஸ்புல்லாஹ் மீள் எழுச்சிக் கிராமத்தில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஐம்பது வீடுகளும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன.

எனினும் தற்சமயம் அந்த மக்கள் தமது பழைய கிராமத்திற்கு மீள்குடியேறியுள்ள நிலையில் தேசிய வீடமைப்பு அதிகார சபை மேற்படி வீட்டுரிமையாளர்கள் தமது நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிந்தது.

இந்த விடயத்தை கிராம மக்கள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து அவர் தனது சொந்த நிதியிலிருந்து கிராம மக்கள் தத்தமது வீடுகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைக் கட்டண நிலுவையைச் செலுத்தினார்.

அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து எழுதப்பட்ட 570,588 ரூபா 24 சதம் கொண்ட காசோலையை அமைச்சர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கந்தையா ஜெகநாதனிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .