2025 மே 01, வியாழக்கிழமை

தொழில்நுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 26 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மகிந்தோதய தொழில்நுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியினால் ரூபாய் 25 மில்லியன் செலவில் கட்டிட, பொறிமுறை, மின்சாரமும் மின்னியலும், மற்றும் உயிர் முறைமைகள் அகிய நான்கு தொழில் நுட்ப ஆய்வு கூடங்களைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

கல்லூரியின் அதிபர் கே. அருள்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர், மாநகர ஆணையாளர் மா. உதயகுமார், வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மனோகரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், ஆகியோர் அடிக்கற்களை நாட்டினர்.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சுகுமார், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன் ரவீந்திரன் மற்றும் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியொர் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலையில் ஏற்கெனவே மகிந்தோதய திட்டத்தின் கீழ் விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .