2025 மே 01, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டி திருடிய சங்கிலி திருடன் கைது

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சசிகுமார்

மட்டக்களப்பு நகரில் அண்மையக்காலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடிவந்ததாக கூறப்படும் நபரை ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு குற்றப்புலன் விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டினையடுத்தே குறித்த சந்தேக நபரை ஏறாவூரில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு நகரில் திருடிய நான்கு துவிச்சக்கர வண்டிகளும் துவிச்சக்கர வண்டி திருத்துநர் ஒருவர் விலைக்கு வாங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டிகளை களவு கொடுத்தவர்கள் வண்டிகள் தொர்பிலான  ஆதாரங்களைச் சமர்ப்பித்து வண்டிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொறு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் மேற்படிச் சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .