2025 மே 01, வியாழக்கிழமை

காப்புறுதி நிறுவன முகாமையாளரின் கார் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பிலிருந்து பாண்டிருப்பு நோக்கி தனியார்  காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் பயணித்துக்கொண்டிருந்த காரின் மீது தேற்றாத்தீவு கிராமத்தில் திங்கட்கிழமை (30) இரவு  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார்  தெரிவித்தனர்.

கடமை முடிந்து  தான் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.  தேற்றாத்தீவு கிராமத்தில் தான் பயணித்துக்கொண்டிருந்த வீதியின் நடுவில் ஒருவர் இன்னுமொருவரை  பொல்லினால் தாக்கிக்கொண்டிருந்தார். இதைக் கண்ட தான்  காரை நிறுத்தியதாகவும் இந்த நிலையில், பொல்லினால் தாக்கிக்கொண்டிருந்தவர் தனது காரையும் தாக்கிவிட்டு தப்பியோடியதாக குறித்த தனியர் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான விமல்ராஜ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸில்; முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .