2025 மே 01, வியாழக்கிழமை

பெண்ணின் காதணிகளை பிய்த்துச் சென்ற திருடர்கள்

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்தில் நேற்று திங்கள் இரவு இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் ஒன்றில் காதணிகளை இளந்த குடும்பப் பெண்ணொருவர் தனது இரு காதுகளிலும் காயம் ஏற்பட்ட நிலையில் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நாகதம்பிரான் கோயில் வீதி, கிண்ணையடியைச் சேர்ந்த பிள்ளையான் செல்வி வயது (39) என்ற பெண்ணே, இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ தினமன்று இரவு வம்மியடி வீதி கிண்ணையடியில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்று வாசலில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வளவிற்குள் வந்த சிலர் தன்னையும் கணவரையும் கையில் வைத்திருந்த பொல்லால் தாக்கியுள்ளதாகவும் பின்பு வீட்டிற்குள் புகுந்து பொருட்களை களவாட முயற்சித்ததாகவும் பின்னர் தன்னிடமிருந்த காதணியை கழற்றி தருமாறு அச்சமூட்டியதாகவும்; அவற்றினை தரமறுக்கவே காதோடு சேர்த்து காதணிகளை இழுத்து பிய்த்துச் சென்றதாகவும்.

இதனால் எனது காதில் காயமேற்பட்டுள்ளது என்று சம்பவத்தில் பாதிப்புற்று சிகிச்சை பெற்று வரும் பெண் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .