2025 மே 01, வியாழக்கிழமை

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு வலுவூட்டும் திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் பனை ஓலையில்; உற்பத்திப் பொருட்கள் தயாரித்தல், இலவச கணினி பயிற்சிகள்  செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும்
அபிவிருத்திக்குமான அமைப்பால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பனை ஓலையில் உற்பத்திகளை மேற்கொள்ள 17 பேர் தெரிவாகிய நிலையில், 20 தினங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதேவேளை, கணினி பயிற்சிக்கு 40 பேர் தெரிவாகிய நிலையில், 03 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்தின் விதாதாவள நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .