2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடி –கொழும்புக்கு அதிசொகுசு பஸ் சேவையில்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு திங்கட்கிழமையிலிருந்து (30) இலங்கை போக்குவரத்துச் சபையால் புதிய அதிசொகுசு பஸ் வண்டியொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் எம்.ஐ.வி.முனீர் தெரிவித்தார்.

புதிய அதிசொகுசு பஸ் வண்டி காத்தான்குடியிலிருந்து தினமும் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மட்டக்களப்பு மற்றும் பாசிக்குடா வழியாக அதிகாலை 4 மணிக்கு கொழும்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடையும்.

அதேபோன்று, தினமும் இரவு 9 மணிக்கு இலங்ககை போக்குவரத்துச் சபையின் கொழும்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து புறப்படும் இப்பஸ் வண்டி அதிகாலை 4 மணிக்கு காத்தான்குடியை வந்தடையும எனவும் அவர் கூறினார்.

இந்த வஸ் வண்டியில் பயணிப்பதற்கான ஒருவழிக் கட்டணமாக  800 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .