2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

செயற்கைக்கால்களும் கதிரைகளும் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம், எஸ்.ரவீந்திரன்


'நம்பிக்கை இழந்தவர்களுக்கு சக்தி அளித்து அவர்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால்  அங்கவீனமான 45  பேருக்கு செயற்கைக்கால்களும்  விசேட தேவையுடைய 02 சிறுவர்களுக்கு கதிரைகளும் நேற்று செவ்வாய்க்கிழமை (15) வழங்கப்பட்டன.

எஸ்கோ நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் அனுசரணையுடன் 08 மில்லியன் ரூபாய் செலவில் இவை வழங்கப்பட்டன.

வாகரை பிரதேச செயலாளர் எஸ்.அர்.ராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கோதை பொன்னுத்துரை  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Wednesday, 16 July 2014 01:08 PM

    வாழ்த்துக்கள் தொடரட்டும் எஸ்கோவின் பணி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X