2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

திருமணத்துக்கு முன்னரான ஆலோசனைக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார்


திருமணத்துக்கு முன்னர் வழங்கப்படும் உளவியல் சம்பந்தமான ஆலோசனைக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (15)  நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் பெண்கள் பணியகத்தின் அனுசரணையுடனும்  மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இளைஞர், யுவதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இளவயது திருமணம், பாலியல் துஷ்பிரயோகம், விவாகரத்து, தம்பதியினருக்கிடையில் புரிந்துணர்வின்மை போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

இக்கருத்தரங்கில் உளவள வைத்திய நிபுணர் டாக்டர் டி.கடம்பநாதன்,  டாக்டர் ரி.குமுதினி ஆகியோர் விரிவுரையாற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X