2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

களுதாவளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர்; பிரிவிலுள்ள களுதாவளை மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 09 மணியிலிருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நே.விமலராஜ் தெரிவித்தார்.

களுதாவளை - 119 கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள கோவிந்தன் தோட்டப்  பிரதேசம்; காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

கோவிந்தன் தோட்டப் பிரதேசம் தொடர்பிலேயே இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி 64 ஏக்கர் காணியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள், தங்களது காணிக்கு சட்டபூர்வ ஆவணங்களை வழங்குமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பில்  தமது காரியாலயத்துக்கும் தலைமைக் காரியாலயத்துக்கும்; விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த  வேண்டுகோளுக்கு அமைய,  மேற்படி குடியிருப்பாளர்களுக்கு   உறுதிகளை வழங்குவதற்காக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் காணி சம்மந்தமான அனைத்து  ஆவணங்களுடனும் தம்மை உறுதிப்படுத்தும் ஆவணங்களான அடையாள அட்டை, பிறப்புப் பதிவு  போன்றவற்றுடன் கோவிந்தன் தோட்டக் குடியிருப்பாளர்கள் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X