2025 மே 03, சனிக்கிழமை

'சகல மனிதர்களிடத்திலும் ஒரு தனிப்பட்ட சிறப்பியல்பு காணப்படுகின்றது'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இன, மத, மொழி மற்றும் நிற பேதங்களுக்கு அப்பால் சகல மனிதர்களிடத்திலும் ஒரு தனிப்பட்ட சிறப்பியல்பு காணப்படுகின்றது. மன அமைதியைத் தேடி பலர் அலைந்து திரிவதாக பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக  பல்கலைக்கழகத்தின் இணைப்பாளர் பி.கு.பீனா தெரிவித்தார்.

இந்த  அமைதி ஒவ்வொருவரிடத்திலும் உள்ளது. இதைப் பெறவேண்டுமாயின் சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தால் ஏற்பாட்டில்  நேற்று செவ்வாய்க்கிழமை (15) ஒன்றுகூடல் நடைபெற்றது.

இதன்போது 'உள்ளக விரிவாக்கமும் தலைமைத்துவமும்' எனும் தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மன அமைதி எம்மிடம் இருக்குமாயின் எமது புலன்கள்,  சிந்தனைகள் புதுப்பொழிவு பெறும். இதனால் நேரான சிந்தனைகள், சுய விழிப்பணர்வு, சுயமான சக்தி மேம்படல், அன்பையும் ஒற்றுமையையும் பரிமாறுதல் என்பன எம்மிடம் குடிகொள்கின்றது.

நாம் மற்றவர்களிடம் அன்பு காட்டும்போது, எமது மனம் புத்துணர்ச்சியுடன்; புதுப்பொழிவடைகின்றது. இதனால், நாம் பணிபுரியும் இடங்கள், வீடுகள் எல்லாம் அமைதியும் சாந்தமும் உள்ளவையாக மாற்றமடையும்' என்றார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X