2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கமநல அபிவிருத்தி திணைக்கள காரியாலயத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், தேவ அச்சுதன்,எஸ்.ரவீந்திரன் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச கமநல அபிவிருத்தி திணைக்கள காரியாலயக் கட்டடத்துக்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (16) நடைபெற்றது. 

இந்தக் கட்டடம் 90 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கமநல திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர், பொறியியலாளர் என்.சிவலிங்கத்தின்; தலைமையில் களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியில் நடைபெற்ற  இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், களுவாஞ்சிக்குடி பிரதேச கமநல அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் செ.பேரின்பம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X