2025 மே 03, சனிக்கிழமை

பாவனைக்குதவாத பழங்கள் அழிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கல்லடிப் பாலத்துக்கு  அருகில் வீதியோரத்தில் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த பாவனைக்கு உதவாத  பழங்களை  கைப்பற்றி அழித்ததாக பிரதேச சுகாதாரப்; பரிசோதகர் எம்.தேவநேசன் தெரிவித்தார்.

பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து இன்று புதன்கிழமை (16) சோதனை மேற்கொண்டனர். இதன்போதே பாவனைக்கு உதவாத பழங்கள் கைப்பற்றப்பட்டன.

1980 - 7 (2) இலக்க உணவுச் சட்டத்தின் கீழ், 23ஆம் பிரிவின் படி விற்பனைக்கான அனுமதி பெறாது விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட இடங்களில் பழங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில்; வியாபாரிகள் இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X