2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வீதி நாடகம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


அனர்த்த ஆபத்துக் குறைப்பு தொடர்பான வீதி நாடகம் மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள  பெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

அக்ரெட், சேவ்த சில்ரன்; ஆகிய அரசசார்பற்ற அமைப்புக்களின் அனுசரணையுடன்  நடைபெற்ற இந்த வீதி நாடகத்தில், மட்டக்களப்பு பெரிய போரதீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் நடித்தனர்.

இவ்வீதி நாடகமானது அனர்த்தம் வரும் வேளையில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல், அனர்த்த காலத்தில் பாதுகாப்பாக பேண வேண்டிய ஆவணங்கள் போன்ற பல விடயங்களை கொண்டமைந்ததாக அக்ரெட் நிறுனவத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X