2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

குளங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது: என்.சிவலிங்கம்

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் குறிப்பேடுகளின் படி 1976ஆம் ஆண்டு காலப் பகுதிகளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 786 குளங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அவை கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு  223 குளங்களாக குறைவடைந்திருக்கின்றது என கமநல திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச கமநல அபிவிருத்தித் திணைக்களக் காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (16) களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்,

500 இற்கு மேற்பட்ட குளங்கள் எங்களது பதிவேடுகளிலிருந்து மறைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அதிகளவான குளங்கள் கரையோரப் பகுதிகளில் தான் இருந்திருக்கின்றன. அக்குளங்கள் நிரப்பப்பட்டு மக்கள் குடியிருப்புக்களும், ஏனைய கட்டங்களுமாக தற்போது மாற்றப்பட்டுள்ளன.

பெரும்வரட்சி வரும் வேளையில் கிணறுகள் முற்றாக வற்றிப்போகும் நிலையில் இதனுடைய தாக்கம் எமக்கு விளங்கும். எனவே இனிவரும் காலங்களிலாவது இருக்கின்ற குளங்களை மூடிவிடாது பாதுகாக்கின்ற பொறுப்பு எமது சிறு நீர்ப்பாசனத்திற்குப் பொறுப்பான கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு உள்ளது. எனவே எதிர் காலத்தில் எந்த கட்டங்களையும், குளங்களை மூடி விட்டு அமைப்பதற்கு எமது திணைக்களம் அனுமதிக்காது என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X