2025 மே 03, சனிக்கிழமை

கட்டார் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையம் திறந்துவைப்பு

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கட்டார் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையம் முதல் தடவையாக மட்டக்களப்பில் இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.
இம் முகவர் நிலையத்தை கட்டார் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் அஜோய் ஜெக்கப் வைபவரீதியாக திறந்து வைத்தார்.

கட்டார் விமான சேவைகள் நிறுவனத்தின் முகவர் ஸ்தாபனமான சர்மிளா ட்ரவல் அன் ருவர்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டார் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மநகர ஆணையாளர் எம்.உதயகுமார், சர்மிளா ட்ரவல் அன் ருவர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வி.முத்துசாமி உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

கட்டார் விமான சேவை பயணச் சீட்டு முகவர் நிலையங்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X