2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நில வள ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது: கோகுலதாசன்

Thipaan   / 2014 ஜூலை 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தில் நில வள ஆய்வை மேற்கொள்வேண்டியுள்ளது, இதற்கு துறைசார்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைந்து இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு மீளகுடியேற்றப் பிரதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆய்வின் பின்பாடு பாரிய விவசாயக் கிணறுகள் அமைக்கப்படும் இதனால் எமது பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்த்தப்படும் என கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாசன், இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் கமநல கேந்திர நிலையம் ஏற்பாடு செய்திருந்த சிறுபோக நெல் அறுவடை விழா ஆனைகட்டியவெளி வயற் கண்டத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்குகையில்,

இதுவரை காலமும் நீர்த் தேக்ககங்களிலிருந்து வரும் நீரை சரியான முறையில் பயன்படுத்துவதில் பல குறைபாடுகள் காணப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இப்பகுதி விவசாயிகளின் முயற்சிகளினால் 2,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு இந் நீரைப் பாய்ச்சி தற்போது பலநடைந்திருக்கின்றார்கள்.

தற்போது இப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருக்கின்ற  இந்த 2,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நீர் வழங்கப்படவில்லை  மேலதிகமாக ஆற்றிலிருந்து வெளியேறும் நீரைப் பயன்படுத்தித்தான் விவசாயிகள் இந்த சிறுபோக வேளாண்மைச் செய்கையை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் இந்த நீர் பயன்பாடு தொடர்பான உரிய சட்டரீதியான செயற்பாடுகளுக்கு வேண்டிய சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க நாங்கள் சகல ஒத்துழைப்புக்களையும் இந்த விவசாயிகளுக்கு வழங்கவுள்ளோம்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 23 ஹெக்டேயர் நிலத்தில் சிறுபோக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இது ஏனைய மாவட்டங்களோடு ஒப்பீட்டுப் பார்க்கும் போது எமது மாவட்டத்தின் பயிர்ச் செய்கை வீதம் அதிகமாகவுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கு பயன்படுத்தும் வயல் நிலங்களைவிட 65,000 ஏக்கர் நெற்செய்கைக்குப் பொருத்தமானதாகும். இதில் மூன்றில் இரண்டு பங்கு மானாவாரிச் செய்கைக்குப் பயன்படுத்தப் படுவதாகும்.
 
நீர்வளம் பற்றாக்குறையாக உள்ள காரணத்தினால் தற்போது சுமார் 40,000 மானாவாரி காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் தரைக் கீழ் நீர் எப்பகுதியில் அமைந்திருக்கின்றது என்பதனையும் அடையாளம் காணவேண்டியுள்ளது.

இதில் பெறப்படும் நீரைப் பயன்படுத்தி சிறுபோகத்தில் வேளாண்மை தவிர்ந்த ஏனைய மாற்றுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நில வள ஆய்வினை மேற்கொள்வேண்டியுள்ளது, இதற்கு துறைசார்ந்த அதிகாரிகளைக் கொண்டு குழு ஒன்றினை அமைந்து இந்த ஆயிவினை மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆய்வின் பிற்பாடு பாரிய விவசாயக் கிணறுகள் அமைக்கப்படும், இதனால் எமது பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேலும் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X