2025 மே 03, சனிக்கிழமை

கைப்பணிப்பொருள் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உள்ளூர் கைத்தறிப் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி மட்டக்களப்பு அமிர்தகழி மாமங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியது. 

'கைத்தறிப் பண்பாட்டை கொண்டாடுவோம்' எனும் தொனிப்;பொருளிலான இந்தக் கண்காட்சி மட்டக்களப்பு உள்ளூர் அறிவுத்திறன் முன்னெடுப்புக்களுக்கான மூன்றாவது கண் நண்பர்கள் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதிவரை இந்தக் கண்காட்சி  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில்  மட்டக்களப்பு உள்ளூர் அறிவுத்திறன் முன்னெடுப்புக்களுக்கான மூன்றாவது கண் நண்பர்கள் வட்டத்தின் முக்கியஸ்தர்களான கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,  திருமதி ஜெ.கமலா வாசுகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X