2025 மே 03, சனிக்கிழமை

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவோம்: மல்காந்தி

Gavitha   / 2014 ஜூலை 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் பரஸ்பரம் நட்புறவினையும் மேம்படுத்தும் நோக்கத்துடனேயே சமூக ஒருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக, தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. மல்காந்தி ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன் தலைமையில் பட்டம் விடும் வைபவம் சனிக்கிழமை (19) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமூக ஒருமைப்பாட்டினூடாக தேசிய ஐக்கியம் எனும் தொனிப் பொருளில் சமூக ஒருமைப்பாட்டு வாரம் இம்முறை அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனாலேயே இப்பட்டம் விடும் வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனையுடனும் அவருடைய வழிகாட்டலின் கீழும் இந்த சமூக ஒருமைப்பாட்டு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

பட்டங்களை விடுவது நமது பண்டைய கலாச்சாரமாகும். இதன் மூலம் அனைவரிடையேயும் சகோரத்துவமும் இன ஐக்கியமும் ஏற்படும். பட்டம் பறக்க விடும் போது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

சமூகத்தில் இருந்து விலகியிருக்கும் மக்களை சமூக மயப்படுத்தலாகும். சமூகத்திலுள்ள அனைவரினதும் உரிமைகளை பாதுகாத்து ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுக்கின்ற பல்வகைமை மற்றும் பங்குபற்றல் என்பவற்றினூடாக பொறுப்புக்களால் இணைந்த சமூகத்தை கட்யெழுப்புவதே சமூக ஒருமைப்பாடாகும்.

பட்டம் விடும் வைபவமானது இனங்களுக்கிடையில் பரஸ்பரம் நட்புறவினையும், புரிந்துணர்வினையும், மேம்படுத்தும். இதனாலேயே இவ்வைபவத்தை ஏற்பாடு செய்தோம் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X