2025 மே 03, சனிக்கிழமை

மாணவிக்கு பரிசில் வழங்கி பாராட்டு

Super User   / 2014 ஜூலை 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட். பன்சேனை பாரி வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் இராசலிங்கம் கஜந்தி என்னும் மாணவி கடந்த மாதம் 17 ஆம் திகதி வந்தறுமூலையில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி 100 மீற்றர் நீளம் பாய்தலில் 1ஆம் இடத்தினையும் 200 மீற்றரில் 2ஆம் இடத்தினையும்  பெற்று  தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் இப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவிக்கு  சுவிஸ் நாட்டில் வசிக்கும் பாண்டிருப்பைச் சேர்ந்த விஜயகுமாரன் ஜீவா  துவிச்சக்கரவண்டி பாதணி மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கியதோடு இப்பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 5இல் கல்வி பயிலும் 170 மாணவர்களுக்கு குடிநீர்ப் போத்தல்களையும் தரம் 6 தொடக்கம் 11 வரைக்குமுள்ள 182 மாணவர்களுக்கு கணிதபாட உபகரணங்களும் (கொம்பாஸ் பெட்டிகளையும்) வெள்ளிக்கிழமை (19) புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகாநந்தா தொழில் நுட்பக்கல்லுரி ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வானது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவிக்கு பரிசில்கள் வழங்கியதோடு மட்டுமல்லாது ஏனைய மாணவர்களுக்கும் ஒரு ஊக்கத்தை கொடுக்கும் நிகழ்வு என்றும் இவ்வாறான ஒரு நிகழ்வினை நடாத்தியமை தமது பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாகவும் இப்பாடசாலை மற்றும் இக் கிராமத்தினை ஒரு மாதிரி கிராமமாக மாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடனே தானும் ஆசிரியர்களும் தங்களை அர்ப்பணித்து பணியாற்றுவதாகவும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகள் பல தேவைப்படுவதாகவும் இப் பாடசாலையின் அதிபர் வி.சுந்தரநாதன் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் விஜயகுமாரன் ஜீவா சார்பாக அவர்களின் சகோதரன் கந்தகுமார். விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்  உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X