2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

களுதாவளை மாணவர்களுக்கு கௌரவிப்பு

Gavitha   / 2014 ஜூலை 23 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டியில் களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள், இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர்.

மேற்படி வித்தியாலயத்தில் 2014ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தெரிவாகிய மாணவர்களுக்கான தேசிய மட்ட போட்டி அண்மையில் பத்தனை ஸ்ரீபாதக் கல்வியல் கல்லுரியில் நடைபெற்றது.

இதன் போது உயர்தரப் பிரிவில் கவிதை ஆக்கத்தில், செல்வி துரைராசா வுகாரி முதலாமிடத்தையும் ஆரம்பப் பிரிவில் எழுத்தாக்கத்தில், கனகசபை ஹீப்பிறதா மூன்றாமிடத்தையும் பெற்று வெற்றியை தமதாக்கிக்கொண்டுள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஒன்றிணைந்து மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா ஒன்றை செவ்வாய்கிழமை (22) ஏற்பாடு செய்திருந்தனர்.

இப் பாடசாலையானது 2014 ஆம் ஆண்டிற்கான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொடுத்து பட்டிருப்பு வலயத்தினை கிழக்கு மாகாணத்தில் முதலாமிடத்திற்கு வருவதற்கு உந்து சக்தியாய் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • santhakumar Wednesday, 23 July 2014 01:37 PM

    இது எமது மாணவர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி இல்லை எமது ஊருக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் மாணவர்களே !!!!!!!

    Reply : 0       0

    kavirajh Friday, 25 July 2014 11:47 AM

    இவ்வாறான மாணவர்களின் வெற்றிகளைப் பிரபல்யப்படுத்திய தமிழ் மிரர் இணையத் தளத்திற்கு எமது பல கோடி நன்றிகள். இதனை அங்கிருந்து இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்த மேற்படி வடிவேல்-சக்திவேலுக்கும் நன்றிகள் உதித்தாகுக. இதுபோன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த தமிழ் மிரர் இணையத்தளம் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதனை எதிர் பார்க்கின்றோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X