2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வந்தாறுமூலையில் விவசாய விற்பனை இணையம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதலாவது 'விவசாய விற்பனை இணையம்' வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (23) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர், கிரான், வாழைச்சேனை மற்றும் வாகரை  பிரதேசங்களிலுள்ள வளங்களையும் உற்பத்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளினது வாழ்வாதாரத்தையும் வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வளங்களை பரிமாறுதல்  மற்றும் பயன்படுத்துதல் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிலையம் செயற்படவுள்ளது.

மேலும், ஏனைய பிரதேசங்களிலுள்ள வளங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் தொடர்பில்; இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளர் சந்திரா மகேந்திரன், வேள்ட்விஷன் ஏறாவூர்பற்று செங்கலடி முகாமையாளர் ஏ.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படாது, இயற்கை பசளைப் பாவனையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களையும் விதைகளையும் இங்குபெற முடியும் என விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X