2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் கரை திரும்பினார்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக படகொன்றில் சென்றபோது காணாமல் போன இருவரில்,  ஒருவர் இன்று புதன்கிழமை (23) வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு வேறொரு படகில் வந்த நிலையில்  அவரை  கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

முஹமட் பௌசுதீன் அறபாத் (வயது 20) என்பவரே இவ்வாறு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் மேற்படி நபர் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், 'நேற்று செவ்வாய்க்கிழமை (22) கடலுக்குச் சென்ற தங்கள் 03 பேரில் தன்னைத் தவிர ஏனைய இருவரும் மதுபானம்  அருந்தினர்.  இதன் பின்னர், இன்னும் கண்டுபிடிக்கப்படாதுள்ள நபர்  உறங்கியுள்ளார்.  ஏற்கெனவே கரை திரும்பிய நபர் தனக்கு அடித்ததாகவும் அவரது அடி தாங்க முடியாமல் அருகில் சென்ற படகை சைய்கை காட்டி அழைத்து அதில் ஏறி தான் ஊருக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

காணாமல் போன மற்றைய நபரை தேடும் பணியில் உறவினர்களும் மீனவ சங்க அமைப்புக்களும்  ஈடுபட்டுவருவதாக  இவரது  குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X