2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தேத்தாத்தீவு பொதுநூலகத்தை புனரமைக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட  தேத்தாத்தீவு பொதுநூலகம் நீண்டகாலமாக பழமை வாய்ந்த சிறிய கட்டடமொன்றில் இயங்கிவருவதுடன், அடிப்படை வசதிகளின்றி  காணப்படுவதாக  கிராம மக்கள் தெரிவித்தனர்.

சேதமடைந்து காணப்படும் இக்கட்டடத்தின் கூரையினூடாக மழைக்காலத்தில் நீர் ஒழுகுவதால், களஞ்சிய அறையிலுள்ள பல ஆவணங்கள் சேதமடையும் நிலைமை காணப்படுகின்றது.

மேலும், இந்நூலகத்தில் குறைந்தளவான புத்தகங்கள்  காணப்படுவதால் மாணவர்களும் ஏனையவர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை பெறுவதற்காக நீண்ட தூரத்திலுள்ள களுதாவளை பொதுநூலகத்துக்குச்  செல்ல வேண்டியுள்ளது.

நூலகத்தின் பத்திரிகைப் பகுதி சிறியதாக காணப்படுவதால் பெரும்பாலான வாசகர்கள் நூலகத்தின் வெளிப்புறத்திலுள்ள  பகுதியிலேயே பத்திரிகை வாசிக்க வேண்டியுள்ளது.  வாசகர்களுக்கு தேவையான குடிநீர், மலசலகூட வசதிகளின்றியும் இந்நூலகம் காணப்படுகின்றது.

இவ்வாறு அடிப்படை வசதிகளின்றி இயங்கும் தேத்தாத்தீவு பொதுநூலகத்தை உரிய அதிகாரிகள் புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்  கிராம மக்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0

  • suresh Thursday, 24 July 2014 08:47 AM

    இந்த நூலகம் வடக்கு, கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தினால் 50 லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட 2 மாடிக்கட்டத்தில் இயங்குகின்றது. இதில் காட்டப்பட்டுள்ள படம் நூலகத்தின் முகப்பு பகுதி மாத்திரம்தான். இதன் பின்னால் பெரிய கட்டடத் தொகுதியே உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X