2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பலாச்சோலையில் பதற்றம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பலாச்சோலை கிராமத்துக்குள் யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 6 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் காலை 9.30 மணிக்கே சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இதனால், கோபமடைந்துள்ள கிராமவாசிகள், குறித்த அதிகாரிகளை சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் செல்லவிடாது தடுத்து வைத்துள்ளனர். இதனால், அப்பகுதிக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இடத்தில் பதற்றமான நிலைமை தோன்றியுள்ளது. பொதுமக்களைத் தாக்கிய யானையை பிடிக்கும்வரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை அவ்விடத்திலிருந்து போகவிடப் போவதில்லை என்று கிராமவாசிகள் தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கிராமத்தில் வீட்டு வளவொன்றுக்குள் புகுந்துள்ள காட்டு யானையொன்று, அங்கிருந்தவர்களைத் தாக்கியதில் கதிர்காமத்தம்பி நடராசா (வயது 61) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வன ஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் ஆளணிக்குறைவும் வாகனமின்மையுமே சம்பவ இடத்துக்கு வர தாமதமாவதாக அவ்வதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X