2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'காதலில் விழிப்பு வேண்டும்'

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து இறக்கும் வீதம் அதிகமாகக் காணப்படுகின்றது. இதற்குக்  காதல் விவகாரங்களே காரணமாக காணப்படுகின்றன. இவ்விவகாரங்களில் மாணவர்கள்  விழிப்புடன் செயல்பட வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

இம்முறை வணிகப்பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஒழுக்கத்துடன் கூடிய கல்வியினால் சமூகம் நன்மையடையும். ஒழுக்கமின்றி கல்வியில் உயர் அடைவு மட்டத்தைப் பெற்றிருந்தாலும் அது எவருக்கும் பயனாகாது. புத்தகக் கல்வி மட்டுமன்றி சமூக மற்றும் கலாசார விழுமியங்குளைப் பிரதிபலிக்கும் கல்வியினால் மட்டும் தான் சமூகம் நன்மையடையும்.

மாணவர்கள் தங்கள் குறிக்கோளை அடைய வேண்டுமானால் அவதானத்துடன் கூடிய கல்வியைப் பெறவேண்டும். இல்லையேல் உங்கள் குறிக்கோள்களை அடைவதில் பல தடைகள் ஏற்படும். இதனால் பெற்றோக்களுக்கும் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர்.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் 500 பாடசாலைகளிலிருந்து 5 மில்லியன் மாணவர்கள் பரீட்சைக்கத் தோற்றினர். அதில் வட மாகாணத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற மாணவன் அதிக புள்ளிகளைப் பெற்று சித்திபெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான். இதேபோல், நீங்களும் ஒவ்வோரு துறைகளில் மிளிருவதற்காக அர்ப்பணிப்புடன் கூடிய கல்வியை பெறவேண்டும்' என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X