2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆணின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

Kanagaraj   / 2014 ஜூலை 25 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் எனும் கிராமத்தின் வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு நேற்று வியாழக்கிழமை (24) மாலை கிடைத்த தகவலை அடுத்து கண்ணபுரம்  கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 31 வயதுடைய சுந்தரலிங்கம் -ஜீவானந்தம் என்பவரே இவ்வாறு அவரது வீட்டு வளையிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம், தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் வெல்லாவெளிப் பொலிசார் கூறினர்.

இதேவேளை, தூக்கில் தொங்கியநிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள மேற்படி சடலத்தை வெல்லாவெளி பொலிஸார், வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் - சுகுணன் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X