2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற திட்டத்தின்கீழ் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் முதலாவது வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவிலும் இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா பத்து இலட்சம் ரூபா வீதம் பிரதேச செயலக பிரிவிற்கு நூற்றி இருபது இலட்சம் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கான ஆரம்ப நிகழ்வாக பேத்தாளை கிராம சேவகர் பிரிவிலுள்ள பேத்தாளை முருகன் கோவில் வீதியில்; கொங்ரீட் இடும் வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.முரளீதரன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம சேவை உத்தியோகத்தர், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Friday, 25 July 2014 08:24 AM

    வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    வை.எல்.மன்சூர் Friday, 25 July 2014 04:05 PM

    கல்குடாத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் கௌரவ அமைச்சா் பஸீா் சேகுதாவூத் நியமிக்கப்பட்டிருந்தும் கோறளைப்பற்று பிரதேச செயலாளா் அமைச்சருக்கு அறிவிக்காமல் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற பத்து இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டத்தை சம்பந்தமில்லாத முன்னாள் முதலமைச்சரை வைத்து ஆரம்பித்துள்ளாா்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X