2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இலவச பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு

George   / 2014 ஜூலை 26 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் வெள்ளிக்கிமை (25) நடைபெற்றது.

இச்செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

'நாளைய உலகை வெற்றிகொள்ள பண்பாட்டறிவை  வளர்ப்போம' எனும் தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஸ்தாபகருமான நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடுபூராவும்; இவ் இலவச செயலமர்வு நடைபெற்று வருகின்றது.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆயிரம் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் தலைமையில்; இடம்பெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இராணுவ உயரதிகாரிகள் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X