2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பௌசர் மூலம் குடிநீரை வழங்குமாறு பணிப்பு

Thipaan   / 2014 ஜூலை 26 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பௌசர் மூலம் உடனடியாக குடிநீரை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு நேற்று (25) பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும்  பாரிய குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்; செங்கலடி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, வவுணதீவு, வாழைச்சேனை, ஓட்டமாவடி மற்றும் கிரான், வாகரை  ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலேயே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் வரட்சியால் மக்கள் அவதியுறுகின்றனர்.

இது தொடர்பாக ஆராயப்பட்ட விஷேட கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் பங்கு கொண்டனர்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. கிரிதரன் அனர்த்த  முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் கே.இன்பராஜன் உட்பட பல அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X