2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கழிவுகள் அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

Gavitha   / 2014 ஜூலை 26 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இன்று சனிக்கிழமை (26) கழிவுகள் அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் அப்பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் களுவாஞ்சிகுடி கடற்கரைப் பிரதேசத்தில்தான் இதுவரை காலமும் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்களும், ஏனைய பொது அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

பொதுமக்களினதும், ஏனைய பொது அமைப்புக்களினதும், வேண்டுகோளிற்கிணங்க இன்று சனிக்கிழமை (26) களுவாஞ்சிகுடி கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள அனைத்துக் கழிவுகளும் அப்பகுதியிலுள்ள குளிகளில் இட்டு புதைக்கப்பட்டன.

மேலும் களுதாவளைப் பிரதேசத்தில் குப்பைகளைக் சேகரிப்பதற்குரிய இடத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் ஏற்பாடு செய்து தந்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன் தெரிவித்தார்.

மேலும் அடுத்த மாதம் 'யுனொப்ஸ்' அமைப்பின் ஒத்துழைப்புடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளைத் தரம் பிரித்து கூட்டடெரு தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கவுள்ளதாகவும், இத்திட்டம் தொடர்ச்சியாக 3 வருடங்கள் இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை (17) தமிழ் மிரர் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X