2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை

Thipaan   / 2014 ஜூலை 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைப் பிடிக்கும் செயற்பாடு இன்று சனிக்கிழமை (26)  இரவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி. யோகேஸ்வரி  வசந்தகுமாரன் கூறினார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச எல்லையினுள் இரவு மற்றும் பகல் வேளைகளிலும் கட்டாக்காலியாக மாடுகள் திரிவதாகவும், இவற்றினால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தொடர்ச்சியாக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளை இன்று இரவு 7 மணிமுதல் களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்படவுள்ளன.

இவ்வாறு ஒரு மாடு பிடிப்பவருக்கு 500 ரூபாய் வழங்கப் படவுள்ளதோடு, ஒரு மாட்டுக்கு 3,000 ரூபாய் அபராதம் மாட்டு உரிமையாளரிடமிருந்து அறவிடப்படும் எனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி. யோகேஸ்வரி  வசந்தகுமாரன் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X