2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சுயதொழிலை மேம்படுத்தும் செய்முறைப் பயிற்சி

Thipaan   / 2014 ஜூலை 27 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இளம் பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் செய்முறைப் பயிற்சிகள் விவசாயத் திணைக்களத்தால் நடத்தப்படுவதாக, காத்தான்குடி விவசாய போதனாசிரியர் திருமதி. குந்தவை ரவிசங்கர் நேற்று (25) தெரிவித்தார்.

காத்தான்குடி தக்வா நகரில் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் மேற்படி விவசாய போதனாசிரியரால் செய்முறைப் பயிற்சிகள் நடாத்தப்பட்டன.

மரக்கறிகள் மலிவாக விற்பனை செய்யப்படும் காலங்களில்; உணவு பாதுகாத்தல் செயன்முறை மூலம் பதனிட்டு, விற்பனைக்காக பொதி செய்தல் வரையிலான செயன்முறைகள் இப்பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் மரக்கறியான கத்தரிக்காயைக் கொண்டு விருந்துகளில் விரும்பி உண்ணும் சுவையான சட்ணி, விற்பனைத் தரத்தில் தயாரித்துக் காட்டப்பட்டது.

இப் பயிற்சி வகுப்பில் 25 பயனாளிகள் பயிற்றப்பட்டனர்.

இவ்வாறான பயிற்சி வகுப்புக்கள் மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸனின் பணிப்புரைக்கு அமைய விதாதா வள நிலையத்தின் அனுசரணையுடன் மாதாந்தம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X