2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தென் எருவில்பற்று பிரதேச சபை வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில், நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் காணப்படும், சுகாதார தொழிலாளர் வெற்றிடம் 6, வீதித் தொழிலாளர் வெற்றிடம் 2, நூலகர் சேவை வெற்றிடம் 4, ஆயுள் வேத மருந்தாளர் வெற்றிடம் 1, அலுவலகப் பணியாளர் வெற்றிடம் 1, காவலாளி வெற்றிடம் 2, மின்னிணைப்பாளர் வெற்றிடம் 1 ஆகிய மொத்தம் 17 வெற்றிடங்களை நிரப்புவதற்காக 132 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், 

நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் இப்பதவிகளுக்காக ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாதர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

நேர்முகத் தெரிவுகள் எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளதாகவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X