2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கடலில் மூழ்கி இருவர் பலி

George   / 2014 ஜூலை 27 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்களில் இருவர் பலியாகியுள்ளனர். இதேவேளை, மற்றுமொருவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்கள் குளிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில் மூன்று பேர் கடலில் மூழ்கியதுடன் ஒருவர் தப்பி வந்து தகவல் வழங்கியதை அடுத்தே அவர்களை தேடிவருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்கள்.

இவர்கள் மது அருந்திய நிலையில் காணப்பட்டதைக் கடற்கரையிலிருந்தவர்கள் அவதானித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடியைச்சேர்ந்த அருணாநாதர் ஜெயராஜ் (வயது 23) மற்றும் மஹியங்கனை வீதி பதுளையைச்சேர்ந்த சுப்ரமணியம் தவமணி (வயது 33 ) ஆகியோரே மரணித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X