2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

குட்டிமணி, தங்கத்துரையின் நினைவுதின அனுஷ்டிப்பு

Gavitha   / 2014 ஜூலை 28 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ அமைப்பின் மூத்த உறுப்பினர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மட்டக்களப்பில் டெலோ அமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் டெலோ காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருவருடைய உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் சுடரேற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு டெலோ அமைப்பின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரன் (ஜனா) மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசுந்தரம், உப செயலாளர் ஆர்.சற்குணராசா உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ அமைப்பின் மூத்த உறுப்பினர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகிய இருவரும் 1983ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜுலைக் கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X