2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மாநகர பணியாளர்களுக்கு சீருடை

Gavitha   / 2014 ஜூலை 28 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர சபையில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்வு மாநகர சபை மண்டபத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்றது.

மாநகர சபைத் தொழிலாளர்களை பொது மக்கள் அடையாளம் காண வேண்டும் என்ற நோக்கோடு இச்சீருடைகள் வழங்கப்பட்டதாக மாநகர சபை ஆணையளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மாநகர ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு பச்சைநிற சீருடை 112, வேலைத் தொழிலாளர்களுக்கும் மெருண் நிறத்திலான சீருடை 88ம் வழங்கப்பட்டது மேலும் தலா ஒரு தொப்பியும் இரண்டு ஜோடி சீருடைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர் ஏ. ஜோர்ஜ், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சகாதேவன் ஆகியோர் சீருடைகளை வழங்கி வைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X