2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை நேற்று திங்கட்கிழமை கைதுசெய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிறைந்துரைச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து இங்கு சோதனை  மேற்கொண்டபோது  450 கிராம்  கஞ்சாவுடன் இப்பெண்ணை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை (29)   வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X