2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல் 

மட்டக்களப்பு – களுதாவளை அத்தியடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா புதன்கிழமை (30)  நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆலயத் தலைவர் செல்வராசா- சுரேஸ் தலைமையில் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.

ஆலய கிரியை நிகழ்வுகள் யாவும், சிவ ஸ்ரீ சபாநாயகக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, களுதாவளை கிராமிய கலை மன்றத்தினரால் கூட்டுப் பிராரத்தனைகள் மற்றும் கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதோடு, கிராமத்திற்குச் சிறப்பாக சேவையாற்றிய பெரியோர்களும் கௌரவிக்கப் படவுள்ளனர்.

இவ்வாலயத்தில் பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் முகமாக இன்று(30) மாலை ஆலய முன்றலில் 5 மணிக்கு கிழக்கிலங்கை புகழ் சாண்டோ ரவியின்  சாகச நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X