2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. சிறுவர் உரிமைகள் பரிந்துரைக்கான வலையமைப்பின் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமைகள் பரிந்துரைக்கான வலையமைப்பின்  (CRAN) மாவட்ட திட்டமிடல் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 09 மணியிலிருந்து மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர  அரசசார்பற்ற  நிறுவனங்களின் இணையம் மேற்கொள்ளும் என  அதன் செயலாளர் வ.ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சிறுவர் தொடர்பாக பணி புரிபவர்கள்,  உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்களை  கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இல. 67, புகையிரத வீதி, மட்டக்களப்பிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில்  கருத்தாய்வு, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரதேச மட்ட பிரச்சினைகளை ஆராய்தல், மூன்று மாத கால திட்டமிடல் மேற்கொள்ளுதல், மூன்று வருட திட்டமிடலுக்கு கருத்துக்களை  கேட்டறிதல் முன்னெடுக்கப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X