2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'இடம்பெயர்வுகள் கையேந்தப் பழக்கியுள்ளது'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

சூறாவளி, சுனாமி போன்றவற்றால் உருவான  இடம்பெயர்வுகள் இலவசமாக கையேந்துவதற்கு பழக்கியுள்ளதாக  மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.

வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உக்டா நிறுவனத்தால் Head Way   எனும் ஆங்கில கல்வி அமைப்பு ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்  Let's go  எனும் ஆங்கிலக் கல்லூரியில் தரம் – 02 ஐ பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (29) முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில்  நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எதிர்கால கல்வி நிலைக்கு ஆங்கிலம் மற்றும் கணினி மிக முக்கியமானவை. இவையின்றி எந்தவித தொழிலும்  செய்யமுடியாத  சூழல் எதிர்காலத்தில் உருவாகும். இதற்காக இவற்றை ஒவ்வொரு குழந்தைகளுக்கும்; கற்பிக்க வேண்டிய அவசியமும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய தேவையும் பெற்றோர்; ஒவ்வொருவருக்கும் உள்ளது. இன்று வெளியாகின்ற அனைத்து கண்டுபிடிப்புக்களும் முதலில் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. இதிலிருந்து ஆங்கிலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

மேலும்,  எமது பிரதேசத்து மக்கள் இலவசமாக எதையும் வழங்கினால் அதை பெறுவதில் ஆர்வமாக உள்ளார்கள். சூறாவளி, சுனாமி போன்றவற்றால் உருவான இடம்பெயர்வுகள் எமது மக்களை இலவசமாக கையேந்துவதற்கு  பழக்கியுள்ளது. பொருளாதாரமாக இருந்தாலும் சரி, நல்ல பழக்கவழக்கங்களாக இருந்தாலும் சரி கல்வியினாலேயே அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X