2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வாகரையில் தாய், சேய் மரண வீதம் வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வாகரை பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்ட மக்கள் பங்களிப்புடனான சுகாதார விழிப்புணர்வுத் திட்டங்கள் காரணமாக தாய், சேய் மரண வீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் எ.எல்.எப்.றஹுமான் தெரிவித்தார்.

அத்துடன், மனைப்பிரசவ முறைமையும் மறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வேள்ட்விஷன் நிறுவனத்தால் 2014ஆம் ஆண்டு திட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்ட அமுலாக்கங்களின் அடைவுகள் தொடர்பில் நேற்று புதன்கிழமை (30)  ஆராயப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

2014ஆம் ஆண்டு திட்டக் காலத்தில் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட  சுகாதார அபிவிருத்தித் திட்டம் தொடர்பான மீளாய்வும்  2015ஆம் ஆண்டுக்கான திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் பாசிக்குடா உகாபே விடுதியில் (ருபய-டீயுலு-ர்ழவநட) நடைபெற்றது.

வேள்ட்விஷன் நிறுவனத்தால் வாகரை பிரதேசத்தில் சுகாதாரம், ஊட்டச்சத்து, நீரும் சுகாதாரமும் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற சௌக்கிய நலத் திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இதில்  மட்டக்களப்பு மாவட்ட தாய், சேய் நல வைத்திய அதிகாரி முத்துலிங்கம் அச்சுதன், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.பி.திஸாநாயக, வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பவித்திரா பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X