2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அனுமதி பெறாமையால் களியாட்ட நிகழ்வு தடுத்துநிறுத்தம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கடற்கரையில் கடந்த 02 நாட்களாக இடம்பெற்றுவந்த சிறுவர் களியாட்ட நிகழ்வு காத்தான்குடி நகரசபையின் அனுமதி பெறாமையால் நேற்று புதன்கிழமை  மாலை (30) தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் காத்தான்குடி நகரசபையின்  பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமிடம் கேட்டபோது,

'காத்தான்குடி நகரசபையில்; முறையாக அனுமதி பெறாது,  காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் பெருநாளையொட்டி சிறுவர் களியாட்ட நிகழ்வு நடத்தப்படுவதாக அறியவந்தது. இந்தக் களியாட்ட நிகழ்வில்; குழந்தைகளுக்கு கட்டணம் அறிவிடப்படுவதாக பொதுமக்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இதை அடுத்து காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் மூவர் உரிய இடத்திற்கு சென்று பரிசீலித்தபோது, நகரசபையில் முறையாக அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

மேலும், இது கட்டணம் பெறப்பட்டு நடத்தப்படும் நிகழ்வு என்பதால் அதற்கான உள்ளூராட்சிமன்ற சட்ட வரையறைகள் மீறப்பட்டுள்ளதை கவனத்திற்கொண்டு உடனடியாக  களியாட்ட நிகழ்வு நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி நகரசபையின் உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தெரிவிக்கையில், 

'களியாட்ட நிகழ்வு நடத்துவதாயின் அதை நடத்துபவர்கள் அந்தப் பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சிமன்றத்தில் முறையாக அனுமதி பெறவேண்டும். அத்தோடு, அங்கு வரும் கட்டண அறவீட்டில் 20 சதவீதம் தொடக்கம் 40 சதவீதம் வரையான அறவீட்டுப் பணம் அந்த உள்ளூராட்சிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும்.  அத்துடன், உள்ளூராட்சிமன்ற சட்ட திட்டங்களை பேணி நடத்தப்படல் வேண்டும். இவை இந்தச் சிறுவர் களியாட்ட நிகழ்வில் பின்பற்றப்படாததால் அதை  நிறுத்தியதாகத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X