2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நூதனசாலை நிர்மாணப்பணிகளை ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலையின் நிர்மாணப்பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை  சென்று பார்வையிட்டார்.

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலையானது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் காத்தான்குடியில்  நிர்மாணிக்கப்படுகின்றது.

இதன்போது, ஒரே மரத்தினால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட 196 வருடங்கள் பழமை வாய்ந்த படகு ஒன்றையும் இவர் பார்வையிட்டார். இப்படகு நூதனசாலைக்காக  பெறப்பட்டுள்ளது. 

டிசெம்பர் மாத இறுதியில் நூதனசாலையை திறப்பதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
இந்த நூதனசாலை நவீன முறையில் நிர்மாணிக்கப்படுகின்றது.  இஸ்லாமிய கலாசார விழுமியங்களை பேணும்  வகையிலும் முஸ்லிம்களின் வரலாறு, தொன்மை கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலும்  இந்த இஸ்லாமிய நூதனசாலையில் காட்சிப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

காத்தான்குடி 6ஆம் குறிச்சி பிரதான வீதியில் முன்னாள் நகரசபைக் கட்டடம்  இருந்த பகுதியில் இந்த இஸ்லாமிய நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X