2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இஸ்ரேலிய வணிக நிறுவனங்களால் உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்பட்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்குமாறு கிழக்கில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் கிழக்கில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ள அதேவேளை, இது தொடர்பான  பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கல்முனை நகரத்தில் இவ்வாறான பெரிய பதாதை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது.

'முஸ்லிம்களை அழிக்கும் யூதர்களின் ஆயுதம்'  என்ற தலைப்பில் பலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு என்று உரிமை கோரப்பட்டு கிழக்கில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இஸ்ரேலிய உற்பத்திப்பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் நேரடியாகவே பலஸ்தீன குழந்தைகள், பெண்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான அப்பாவிகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆகையினால், எமது நாட்டில் இஸ்ரேலிய வணிக நிறுவனங்களால் உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்பட்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை விற்பதையோ, வாங்குவதையோ நுகர்வோரும் வியாபாரிகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X