2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

புதிய கிணறுகள் கையளிப்பு

Gavitha   / 2014 ஜூலை 31 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


லண்டனில் இயங்கும் 'புனர்வாழ்வும் புதுவாழ்வும்'  எனும் அமைப்பின் நிதியுதவியில் கல்முனை றொட்டறிக் கழகத்தினால் (ROTARY CLUB OF KALMUNAI) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட 38ஆம் மற்றும் 40ஆம் கிராமங்களில் தலா ஒரு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அக்கிராம மக்களின் பாவனைக்காக  புதன்கிழமை (30) ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இக்கிணறுகள் இரண்டும்  மூன்று லெட்சம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்திலுள்ள எல்லையில் மேற்படி கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் மக்கள் தற்போது குடிநீர் பிரச்சனையினை எதிர் கொண்டு வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் சூடான காலநிலை வேளையில் மக்களின்  தேவையினை அறிந்து 'புனர்வாழ்வும் புதுவாழ்வும்'  எனும் அமைப்பின் நிதியுதவியில் கல்முனை றொட்டறிக் கழகத்தினர் இந்த குடி நீர் கிணறுகளை அமைத்து தந்திருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இது இப்பகுதி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பெரும் உந்து சக்தியளித்துள்ளது எனவும், அப்பகுதி வாழ் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்வில் கல்முனை றொட்டறிக் கழகத்தினை அங்கத்தவர் சிவபாதம், ஹென்றி அமலநாத், திருச்செல்வம், கருணானந்தன், சிதம்பரநாதன், அழகுராஜா, சுரேஸ், கிருஷ்ணபிள்ளை, சதீஸ் ஆகியோர் உட்பட கிராம மக்கள் பாடசாலை அதிபர் ஆசியரியர்கள், மணவர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X