2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பலஸ்தீன் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவருகின்ற  மிலேச்சனத்தனமான தாக்குதல்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடியில் கண்டனப் பேரணி இடம்பெற்றது. 

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில்; இடம்பெற்ற இக்கண்டனப்பேரணி காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம்வரை சென்றது.

பேரணியில் கலந்துகொண்டோர் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன்,  இஸ்ரேலை கண்டிக்கும் வகையிலான  சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும்  தாங்கியிருந்தனர்.

இதன்போது, இஸ்ரேல் நாட்டுக் கொடியும் எரிக்கப்பட்டது.

பேரணியின் இறுதியில் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் எனும் மகஜரை  ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கையளித்தார்.

மேலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்துவதுடன் மனிதாபிமானத்தையும் மனித உரிமையையும் மதிக்க வேண்டும் எனும் மகஜர் அமெரிக்க தூதுவருக்கும்  அரபு நாடுகள் உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனும் மகஜர் அரபு நாட்டுத் தூதுவர்களுக்கும் அனுப்புவதற்காக கையளிக்கப்பட்டன.

இந்தப் பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.ஏ.அலிசப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மகஜர் கையளிப்பின்போது காக்த்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X