2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கை அரசாங்கம் இஸ்ரேலை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை அரசாங்கம் இஸ்ரேலை பகிரங்கமாக கண்டிக்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பலஸ்தீன் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களை கண்டித்து காத்தான்குடியில் நேற்று (01) வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்ற கண்டனப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியைமச்சர்; ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியைமச்சர்,

பலஸ்தீன் காஸா மீது இஸ்ரேலியர்கள் நடாத்தி வரும் மிலேச்சனத்தனமான தாக்குதலினால் இதுவரை 1,800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்து ஸஹீதாகி உள்ளனர்.

இதில் எதுமறியாத அப்பாவியான குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பங்கரவாதிகளின் காஸா மீதான இந்த மிலேச்சனத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் எந்வித வேறுபாடுமின்றி இதனை வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலின் மிக மோசமான மிலேச்சத்தனமான இந்த நடவடிக்கையை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் நான் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்ரேலின் தயாரிப்புக்களை பகிஸ்கரிக்க வேண்டும். இஸ்ரேலின் உற்பத்திகளை பணம் கொடுத்து வாங்கி அந்த பணத்தின் மூலம்  நமது முஸ்லிம் சமூகத்தை காஸாவில் கொலை செய்வதற்கு துணையாக இருக்கின்றோம். அதனால் இஸ்ரேலின் உற்பத்திப் பொருட்களை வாங்குவதை அதை பருகுவதை பகிஸ்கரிக்க வேண்டும்.

அது தொடர்பில் நாம் விழிப்பாக செயற்பட வேண்டும் நமது பணம் நமது சமூகத்தை அழிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பலஸ்தீன் காஸாவில் இடம் பெற்று வரும் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை அமெரிக்கா பார்த்துக் கொண்டு இருப்பதன் நோக்கம் என்ன?

மனித உரிமை பற்றியும், மனிதாபிமானம் பற்றியும் பேசும் அமெரிக்கா பலஸ்தீன் காஸாவில் இஸ்ரேலியர்களினால் நடாத்தப்படும்; மிகப் பெரிய மனித உரிமை மீறலை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் எனக் கேட்கின்றேன்.

இந்த விடயத்தில் அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று பட்டு பலஸ்தீன் காஸாவுக்காக குரல் எழுப்புவதுடன் அரபு உலகம் காஸாவுக்காக உதவ வேண்டும்.

இன்னும் சில தினங்களில் பலஸ்தீன் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காகவும் அங்கு பால்மா இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு பால்மாக்களை அனுப்புவதற்காகவும் சில ஏற்பாடுகளை மேற் கொள்ள விருக்கின்றோம்.

அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் பிராத்தனையில் ஈடுபட வேண்டும். நமக்கு இருக்கின்ற ஒரே வழி பிராத்தனைதான் நாங்கள் தொழுகையில் பலஸ்தீன் காஸா மக்களுக்காக பிராத்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X