2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் சுதந்திர முழுநேர ஊடகவியலாளரிடம் விசாரணை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பில் பணியாற்றும் பிராந்திய சுதந்திர ஊடகவியலாளரிடம் நேற்று (01) பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முழு நேர சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றும் களுதாவளையைச் சேர்ந்த வடிவேல் சக்திவேல் என்பவரே பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பகல் தொலைபேசி மூலம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

ஊடக அறிக்கையிடல்கள் சம்பந்தமாகவே தன்னிடம் விசாரிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செய்திருந்த முறைப்பாடொன்றின் பிரகாரமே தாங்கள் விசாரணைக்கு அழைத்தது பற்றி பொலிஸார் தன்னிடம் கூறியதாக சக்திவேல் தெரிவித்தார்.

விசாரணையின் போது பொலிஸார் தன்னிடம் சுமூகமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்த அவர், தன்னிடம் மேற்கொண்ட சிறிது நேரத்தில் விசாரணையை இடைநடுவில் நிறுத்திக் கொண்ட பொலிஸார், அரசாங்க அதிபர் தான் செய்த முறைப்பாட்டை மீளப்பெற்றுக் கொண்டுள்ளார் என்று கூறி தன்னை அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X